முல்லைத்தீவில் உயிரிழந்த படையினருக்கு 25வது நினைவு

முல்லைத்தீவு படைத்தளத்தில் 1996 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 1169 படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கபட்டுள்ளது.

நேற்றைய தினம் மாலை 5.00 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஜூலை 18,19 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பகுதியில் உயிரிழந்த 1169 படையினர் நினைவாக முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத்தூபியில் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவப்பிரிவின் சிங்கறெஜிமன்ட்,விஜயபாகு றெஜிமன் படைப்பிரிவினை சேர்ந்த படைவீரர்களே 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு படைத்தளத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடனான போரில் கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் நினைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நினைவு தூபி அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடைபெறுவது வழமை இவர்கள் நினைவாக 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் சிசிர பிலப்பிட்டிய உள்ளிட்ட படைத்தபளபதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *