கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிப்பு- 7பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 499பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 616பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 92ஆயிரத்து 062பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *