கிளிநொச்சியில் இனந்தெரியாதவர்களால் மோட்டார் சைக்கிள் அடித்து உடைப்பு!

கிளிநொச்சி- புளியம்பொக்கணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, இனந்தெரியாத சந்தேகநபர்கள் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் முன்பகை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில், மற்றுமொரு குழுவினரின் மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply