பணிஸ் உட்கொண்டதால் மூச்சு திணறி உயிரிழந்த நபர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அங்குளுகக தொரப்பே பிரதேசத்தில் வசிக்கின்ற எழுபத்தி எட்டு வயதினை உடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் வயிற்றில் ஏற்பட்ட ஒரு நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன்பின்னர் இவர் திரவ உணவுகளை மாத்திரமே உட்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய பணிஸ்துண்டு ஒன்றினை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் மயங்கி விழுந்ததன் அடிப்படையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பிற்குப் பின்னர் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இந்தப் பிரேத பரிசோதனையானது ஹபரதுவ திடீர் மரண பரிசோதகர் கமல் திலக்க மூலமாக நடைபெற்றது.

அவர் சாப்பிட்ட சிறிய பணிஸ் துண்டு அடைபட்டு மூச்சு எடுக்க முடியாமல் போனதன் மூலமாகவே இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது என அந்த பிரேத அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *