திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 10931 பேர் பாதிக்கப்பட்டடிருப்பதோடு 291 பேர் பலியாகி இருப்பதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நிலவர நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இந்த மொத்த தொகையில் 6 மாதங்களுக்கு குறைவான 25 குழந்தைகளும் 6 மாதத்துக்கும் ஒரு வருடத்துக்கும் இடைப்பட்ட குழந்தைகள் 35 பேரும் 1 – 5 வயதுக்கு இடைப்பட்ட 169 சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 65 வயதுக்கு மேற்பட்டோர் 443 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அத்தோடு 158 கர்ப்பிணித் தாய்மார்களும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதுவரை 9 ஆயிரத்து 940 பேர் பூரண குணமடைந்து இருப்பதோடு 350 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 41 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருகின்றது.
அத்தோடு இந்த மாதம் கடந்த எட்டு தினங்களில் (செப்டம்பர் 1 – 8 வரை) இந்த மாவட்டத்தில் ஆயிரத்து ஆயிரத்து 116 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இந்த காலப்பகுதிக்குள் 43 பேர் பலியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (செப்டம்பர் 8) 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காக இருப்பதாகவும் இதில் ஆண்கள் 92 பேரும் பெண்கள் 67 பேரும் அடங்குவதோடு 11 மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.