அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொரோனா தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வெவ்வேறு வகையான கொவிட் திரிபு பீசிஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *