
எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதியின் முதல் உரை இது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, துறைசார் இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதாரம், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து பல நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.
தமது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு குறைந்தளவிலான தரப்பினருடன் இந்த விஜயத்தை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தனது கொள்கைக்கு ஏற்ப குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.