பிரதமர் மஹிந்த தலைமையிலான குழுவினர் இத்தாலி பயணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், இத்தாலி​க்கு இன்று (10) காலை பயணமாகியுள்ளனர்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இந்தத் தூதுக்குழு, இன்று (10) அதிகாலை 3.15க்கு ஐக்கிய அமீரகத்தின் டுபாய் நோக்கி பயணித்துள்ளது.

அங்கிருந்து மற்றுமொரு விமானத்தின் ஊடாக, இத்தாலியை நோக்கி அந்தத் தூதுக்குழு பயணிக்கும். இத்தாலியில் உள்ள பொலப்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்.

ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *