தன் தாயுடன் டன்சினன் காட்டிற்கு விறகு வெட்ட சென்று காணாமல் போன 26 வயது நிரம்பிய யுவதி ஐந்து நாட்களின் பின் நுவெரெளியா கிகிலியாமான காட்டுப்பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜெயபாலங்கா ரூபுகதராணி (26) என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன யுவதி ஐந்து நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் நுவரெலியாவில் உள்ள டன்சினன் காட்டுப் பகுதிக்கு விறகு தேட சென்ற வேளையில் காணாமல் போயிருந்தார் .
இராணுவ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், டன்சினன் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமிய மக்கள் ஒன்றிணைத்து காணாமல் போன யுவதியை கண்டுபிடிக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
யுவதியை தேடும் நடவடிக்கையில் இறங்கிய இராணுவ வீரர்களால் டன்சினன் காட்டுப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நுவரெலியா சாந்திபுர கிராம மக்கள் கிகிலிமான காட்டுப் பகுதியில் நேற்று நாள் பூராகவும் தேடுதல் நடவடிக்கையிள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது யுவதி அக்காட்டு பகுதிக்குள் கூக் குரலிட்ட வண்ணம் இருந்ததால் நுவரெலியா சாந்திபுற மக்கள் யுவதியை வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பல நாட்களாக பட்டினி கிடந்த சிறுமிக்கு கிராம மக்கள் பானம் மற்றும் உணவுகளை வழங்கி அதன் பின்னர் நுவரெலியா இராணுவ முகாம் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
காணாமல் போன சிறுமி டன்சினன் காட்டு பகுதிக்கு தனது தாயுடன் விறகு வெட்ட சென்ற வேளையில் தனது தாயை தவறவிட்டதாகவும், பின்னர் காட்டுப் பகுதியில் உள்ள வழிப் பாதைகளில் நடந்து சென்றபோது தான் தொலைந்து போனதாகவும் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
யுவதி இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் ஒரு இடத்தில் இருந்து விடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
காட்டுப்பகுதியில் சிக்கித் தவித்த யுவதியை நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.