
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகினார்.
அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 டிசெம்பர் 24ஆம் திகதி, பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.