மன்னாரில் சந்த்கேத்திற்கு இடமான முறையில் நடந்து சென்றவர்களை சோதனையிட முயன்ற பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் நானாட்டான் பகுதியில் நேற்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி சவாரி நடைபெற்றது.
சவாரி முடிந்து வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து சென்றவர்களை பொலிஸார் வழிமறித்து சோதனையிட முயன்றனர்.
இதன்போது, அவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள முருங்கன் பொலிஸார், தாக்குதலாளிகளை தேடி வருகின்றனர்.


