கண்டி தேசிய வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் அவ் வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மூன்று வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் சாரதியை வைத்தியசாலை பாதுகாவலர் கொண்டு சென்ற குடையால் அடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், கண்டி தேசிய வைத்தியசாலையின் இயக்குனர் தலையிட்டு இந்த மோதலை முடிவிற்கு கொண்டு வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.