கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளை முதலாவதாக திறக்க நடவடிக்கை- ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு கொரோனா தொற்று சிறப்புக் குழு கூட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறாததால் கிட்டத்தட்ட 700,000 குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இழப்பு மற்றும் ஆரம்ப கல்வியை இழந்த குழந்தைகளின் தாக்கம் குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதால், அத்தகைய படாலைகளை முதலில் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அவசர அறிக்கையை வழங்க சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மாணம் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *