பிலியந்தள கெஸ்பேவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் உடல் மற்றும் அவரது கணவர் உடல் வீட்டு அறையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறந்த கணவர் தனது தந்தை மற்றும் சகோதரிக்கு எழுதிய இரண்டு கடிதங்களும் அருகிலேயே காணப்பட்டன.
மேலும் அவரது உடல் வீட்டின் அறையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறந்த பெண்ணின் சடலம் வீட்டில் ஒரு அறையில் தரையில் மெத்தையில் கிடந்ததாகவும், பாரிய கருவியால் பெண்ணின் தலையில் அடித்ததால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கணவனே தனது மனைவியைக் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தல பெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.