கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 804 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 2ஆயிரத்து 28 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா வைலரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 832ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 480,468 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 512 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.