ஜனாதிபதிக்கு அவரச கடிதம் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நீதிமன்ற அவமதிப்புக்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி கோரியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 12.01.2021 முதல் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நடிகர், ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு அரசியல்வாதி, அவர் மற்றவர்களைப் போலவே, இந்த நாட்டின் சாதாரண மக்களுக்காக உண்மையாக அர்ப்பணிப்புள்ளவர் மற்றும் அப்பாவி மக்களின் நலனுக்காக தனது தனிப்பட்ட செல்வத்தை கூட செலவிடுகிறார்.

கடுமையான குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் சிறையில் அடைக்கப்பட்ட சிலருக்கு உங்க அரசாங்கம் இரக்கத்தால் மனிப்பு அளித்துள்ளது. ரஞ்சன் இதுபோன்ற பாரதூரமற்ற குற்றச்சாட்டில் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஏறக்குறைய எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்த நாட்டின் மூத்த குடிமகளாக, தயவுசெய்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *