
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக அவர் மீண்டும் நியமிக்கப்படவுள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நேற்று தெரிவித்திருந்தார்.