
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று 10) முற்பகல் இடம்பெற்ற, வீடியோ தொழில்நுட்பம் ஊடான கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கான முதல்நிலைக் கல்வியும் அவ்வாறான மாணவர்களுக்கு குழந்தைப் பருவக் கல்வியும் இழக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.
100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3,000க்கும் அதிகமான பாடசாலைகள், கிராமங்களில் வியாபித்திருக்கின்றன.
ஆதனால், அவ்வாறான பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் காணப்படும் இயலுமை தொடர்பில் உடனடிப் பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பு, சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்களான தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





