தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக தெரியவில்லை- சிவகரன்

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐக்கியத்துடன் ஒருமித்து நீதி கோர முடியாதவர்களினால், காணாமல் போன 1 இலட்சத்து 46ஆயிரத்து 679 பேரை  கண்டுபிடிக்க வழி வகுக்க முடியுமா என சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், கடந்த 12 வருடங்களாக எந்த விதமான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை. கோசங்களுக்கு அப்பால் இலட்சியமும் இல்லை, இலக்கும் இல்லை. அணிகளாக பிரிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உளமார புரிந்து கொண்டு, அவர்கள் துயர் துடைக்க எந்த அரசியல்வாதியும் இதுவரை முனையவில்லை எனவும் சிவகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *