இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் 150 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்திச் சென்ற, ஒன்பது ஈரானியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்புப் பிரிவுக்குப் பொறுப்பான உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி, விசேட பொலிஸ் குழு மற்றும் கடற்படையினரால் நேற்றிரவு (10) குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கடத்திச் செல்லப்பட்ட ஹெரோயினுடன் ஒன்பது சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் ஹெரோயின் அடங்கிய கப்பல் கரைக்கு கொண்டு வரப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.