பாகிஸ்தானில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டதால் குறைந்தபட்சம் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தின் ரோ காஸி கான் (Dera Ghazi Khan) நகரிலுள்ள இந்தூஸ் நெடுஞ்சாலையில் ,இன்று (19) திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்ம்பவத்தில் பெண்கள், சிறார்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர் என தேரா காஸி கான் ஆணையாளர் டாக்டர் இர்ஸாத் அஹமத் உறுதிப்படுத்திள்ளார்.
மேற்படி பஸ் சியாலகோட் நகரிலிருந்து ராஜன்பூர் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
லோறியை முந்திச் செல்வதற்கு பஸ் சாரதி முயற்சித்தபோது, பஸ்ஸின் கட்டுப்பாட்டை சாரதி இழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.