
நெருங்கிய உறவினரின் மரண சடங்குகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உரிய ஆவணங்களைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாரத்தில் அதிக விடுமுறை நாட்கள் காணப்படுவதால் நாளை புதன்கிழமை முதல் விசேட தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று (19) திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்ரோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 50,994 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

