சீன தடுப்பூசியால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கொவிட் தடுப்பூசிகளுக்கான இலங்கையின் மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஆலோசனை அமைப்பின் எட்டு உறுப்பினர்களில் மூன்று பேர் நேற்று பதவி விலகியுள்ளனர்.

சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.

நோயெதிர்ப்பு நிபுணர் மருத்துவர் ராஜீவ டி சில்வா, வைராலஜிஸ்ட் மருத்துவர் காந்தி நாணயக்கார மற்றும் சுவாச மருத்துவர் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் புறக்கணிப்பு மற்றும் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் விஞ்ஞான அறிவியல் ஆலோசனைகள் மீறிப்பட்டமை காரணமாகவே தாம் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் – பதவி நீக்குதல், விலகல் மற்றும் புதிய உறுப்பினர்கள் நியமித்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இந்த ஆலோசனைக் குழு தொடர்ந்தும் சிக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *