இங்கிலாந்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகளில் தளர்வு

FILE PHOTO: People wearing protective face masks walk along a platform at King’s Cross Station, amid the coronavirus disease (COVID-19) outbreak in London, Britain, July 12, 2021. REUTERS/Henry Nicholls/File Photo

இங்கிலாந்தில் இன்று (19) முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நீண்டகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, பொதுமக்கள் சந்திப்பதற்கும், ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கான எண்ணிக்கை வரையறைகளும் நீக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள், பணியிடங்களுக்கு திரும்புவதற்கும், இரவுநேர களியாட்ட விடுதிகளை திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கட்டாயமில்லை என்பதுடன், சில இடங்களுக்கு மாத்திரம் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது நாளாந்தம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகின்ற நிலையில், கோடை காலத்தில் இந்த எண்ணிக்கை 2 இலட்சம் வரையில் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *