வலிமை டீசர் அடுத்த மாதம்?

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், வெளியீட்டுக்கான பணிகளும் அண்மையில் தொடங்கிவிட்டன.

முதல் கட்டமாக ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை மற்றும் அசையும் முதல் பார்வை என்பன அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

அத்துடன், அடுத்த கட்டமாக ‘வலிமை’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது ‘வலிமை’ டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

‘வலிமை’ திரைப்படத்தின் டீசரை எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply