
அமெரிக்காவினால் இலங்கைக்கு நட்பு ரீதியிலேயே மொடர்னா கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, அதற்காக பணம் செலுத்த தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று (19) செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப்போன்றே அமெரிக்காவினால் இலங்கைக்கு அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Friends help each other. That’s why the US donated over 1.5 million Moderna #vaccines through #COVAX to #SriLanka to fight the C-19 pandemic. These high-quality vaccines are a gift, provided free to the Sri Lankan people. No one had to pay us for these vaccines. #TogetherWeCan pic.twitter.com/UowSzFdomY
— Ambassador Teplitz (@USAmbSLM) July 19, 2021
இது இலங்கை மக்களுக்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக யாரும் அமெரிக்காவுக்கு பணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின்கீழ் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் பிரத்யேக விமானமொன்றின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

