
கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன்போதே ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார்.
கடலில் மூழ்கிய இளைஞரை நண்பர்கள் மீட்டு பூநகரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் குறித்த அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

