புளியம்பொக்கணையில் மோட்டார்சைக்கிளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!

கிளிநொச்சி –  புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவேயிருந்த பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *