கடந்த 24 மணித்தியாலங்களில் 5 ஆயிரத்து 172 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி 2 இலட்சத்து 61 ஆயிரத்து 848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
18 ஆயிரத்து 811 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 84 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது.
[embedded content]
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:


