இலங்கை வரலாற்றில முதன் முறையாக அரசியல்வாதியொருவர் இராஜாங்க அமைச்சு பதவியை துறந்து சுயாதீன மத்திய வங்கியின் ஆளுநராக பதியேற்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
மேலும் இச்செயற்பாடு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை மென்மேலும் ஏளனப்படுத்தும்.
அத்தோடு மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை விட பொருளாதார நிபுணர்கள் நாட்டில் கிடையாதா ?
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் நிதி மோசடிகளுக்கு இவரும் ஒருவகையில் பொறுப்புக்கூற வேண்டும்.
அத்தோடு ராஜபக்சர்களின் முறையற்ற செயற்பாடுகளை சகித்துக்கொண்டு அடிபணிய முடியாததன் காரணமாகவே திணைக்களங்களின் பணிப்பாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகுகிறார்கள்.
மேலும் ராஜபக்சர்களின் முறையற்ற நிர்வாகத்தை நாட்டு மக்கள் இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.