
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டு மாம்பழங்களை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு தனது அன்புப் பரிசாக அனுப்பியுள்ளார்.
குறித்த மாம்பழங்களை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் நேற்று ஒப்படைத்தார்.
மேற்படி மாம்பழங்களை பரிசாக வழங்கிய பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்த அதேவேளை இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார்.