கரவெட்டி மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சில பொருட்கள் காளவாடப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிழக்கு கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோயிலடி முன் கேற் பூட்டு உடைக்கப்பட்டு CCT கமராவிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கமரா முறிக்கப்பட்டு,ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட அலயப் பொருட்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த அம், பொக்ஸ் மைக் என்பன களவாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருட்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக விரலடையளம் கண்டுபிக்கும் பொலீஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *