தேசிய இரத்திணக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத மிகப் பெறுமதி வாய்ந்த மூன்று இரத்திணக்கற்கள், இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் இன்று (19) வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள தேசிய இரத்திணக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை கட்டிடம் தாழிறங்குகின்றமையினால், அதிகார சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதையடுத்து, விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய இரத்திணக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிகள், நாரஹேன்பிட்டியிலுள்ள அமைச்சு கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய இரத்திணக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் நடவடிக்கைகள், மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை, அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத, பெறுமதி வாய்ந்த மூன்று இரத்திணக்கற்கள் இன்று இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிபடையின் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரத்திணக்கற்கள், இலங்கை வங்கிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.