பட்டத்தின் நூலில் சிக்கி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தாயும் சேயும் பரிதாபமாக பலி!

அதோடு இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தையும், இன்னொரு பிள்ளையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் இரவு பூசா பிடிவெல்ல நிபுண கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள நடந்துள்ளது.

அறுந்து வீழ்ந்திருந்த பட்டமொன்றின் நூல் வீதியை குறுக்கறுத்திருந்த நிலையில், அவ் வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பத் தலைவர், நூலில் சிக்கியபோது, கையால் அகற்ற முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் காலியில் இருந்து ரத்கமவிற்கு தனது பெற்றோரை சந்திக்க சென்று கொண்டிருந்தார். சம்பவத்தில் 34 வயதான தாயும், ஒன்றரை வயதான குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், ஆறு வயது மகனும் இலேசான காயங்களுடன் கராபிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொக்கல விமானப்படை தளத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply