வாரியபொல பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்லைன் வகுப்பிற்கு செல்வதற்கு தேவையான கையடக்க தொலைபேசி இல்லாமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுளளார். 3 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தின் இரண்டாவது மகனே தற்கொலை செய்துள்ளார்.
Advertisement
கவிந்து தில்ஷான் என்ற 16 வயதுடைய மாணவன் தனது அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகனை தேடும் போது அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியமையினால் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒன்லைன் கற்கை நடவடிக்கை மேற்கொள்ள ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்று இல்லாதமையினாலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.