கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்கையில் உள்ளுராட்சி அமைச்சுக்குரிய தகனசாலைகளின் செலவீனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதற்கான நடவடிக்கைளை எடுத்துள்ளார்.

இதன்படி கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் தகனம் செய்யப்பட்ட 2ஆயிரத்து 417 மரணங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதற்கமைய, தகனம் செய்யப்பட்ட ஒரு சரீரத்திற்கு தலா 5,000 ரூபா என்ற அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு கோடியே 20 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *