யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம், வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 115 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,464 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 286,396 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5,172 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 261,848 ஆக அதிகரித்துள்ளது.