முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமனம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்தது.

எனினும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு உள்ளநிலையில் திருகோணமலையில் கடமையாற்றிய குறித்த பெரும்பான்மை இனத்தவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை கடந்த வாரம் பொறுப்பேற்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *