மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

அதன்படி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சகரதொனிய ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *