தி.மு.க மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது – பழனிசாமி

நீட்தேர்வு விவகாரத்தில் திமுக அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நீட் தேர்வை இரத்து செய்வோம் எனக் கூறிவிட்டு, தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றி, திமுகவினர் பொய்யான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேகதாது அணை கட்டுவதன் மூலமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும். குறிப்பாக 16 மாவட்டங்கள் குடிநீர் ஆதாரமின்றி பாதிக்கப்படும்.

கொரோனா மூன்றாது அலை வருவதற்கு முன் விழிப்போடு இருந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். தமிழகத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply