உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் : கூட்டமைப்பு ஆதரவு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அறியமுடிகின்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் கமன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *