நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியில் அனுபவம் நிறைந்த அஜித் நிவர்ட் கப்ரால் போன்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பது சிறந்தது என்று அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் மத்திய வங்கியின் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன. கடினமான நேரங்களில் பொறுப்புகள் சரியாக நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்வியை, பொருளாதார வல்லுனர்கள் எழுப்புகின்றனர்.
ஆகவே அந்த மாதிரியான கடினமான நேரங்களில் அனுபவம் உள்ள ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பது சிறப்பு என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.
நேற்று கம்பஹா நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.