<!–
கொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற MU714 என்ற விமானத்தில் சென்ற ஆறு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு-ஷாங்காய் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும் அதே நேரத்தில் கொழும்பு-குன்மிங் விமான சேவைகளும் அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


