இலட்சத்திற்கும் மேல் மாத வருமானம் கொண்ட அனைவரின் மீதும் 5% வரி விதிக்க வேண்டும்!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளை பராமரிக்க மாதம் ரூ .100,000 க்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக சேவைகளை நடத்திச் செல்வதற்கு “சமூக பாதுகாப்பிற்கான பங்களிப்பு” என்ற பெயரில் சாதாரணமாக இலட்சத்திற்கும் மேல் மாத வருமானம் கொண்ட அனைவரிடத்திலும் 5% வரி அறவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *