ஒருங்கிணைந்த தேசிய உளவுத் தரவுத் தளத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் ஒருங்கிணைந்த தேசிய உளவுத் தரவுத் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும், பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் உதவும் நிகழ்நேர தரவுகளைப் பெறவும், இந்தியாவுக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருகை, வங்கிப் பரிமாற்றம், தனிநபர் வரிசெலுத்துவோர், விமான,ரயில் பயணங்கள் போன்ற வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அணுகவும் இந்தத் தரவுத் தளம் வழிசெய்கிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த தளத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில், பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *