அரகோன் கிராண்ட் பிரிக்ஸ்: பிரான்செஸ்கோ பாக்னியா முதலிடம்!

மோட்டோ ஜிபி தொடரின் அரகோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 13ஆவது சுற்றான அரகோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று சியுடாட் டெல் மோட்டார் டி அரகோன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 44.422 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, நடப்பு சம்பியனான ஹொன்டா அணியின் மார்க் மார்க்கியுஸ், 0.673 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, சூசுக்கி அணியின் ஜோன் மிர், 3.911 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் இதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா ஒரு வெற்றியுடன் 161 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 13 சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ ஐந்து வெற்றிகளுடன் 214புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சூசுக்கி அணியின் ஜோன் மிர், 157 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பதின் நான்காவது சுற்றான சேன் மெரினோ அண்ட் ரிம்மிஸ் கோஸ்ட் ஜிபி, எதிர்வரும் 19ஆம் திகதி மிசானோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *