பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புத்தளம்-அனுராதபுரம் வீதியில் உள்ள ஐந்தாம் கட்டை எனும் பகுதியில் உள்ள விஷேட அதிரடிப்படை முகாமில் பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
மினுவாங்கொட, உடுகம்பொலவில் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகாரியின் தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.