கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 29 தொற்றாளர்கள் அடையாளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் (19) 29 கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர்.

Advertisement

ஏனையவர்கள் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர்,பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 80 பேருக்கு மேல் கோவிட் 19 தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply