இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இத்தாலியில் உள்ள இலங்கையர்கள், ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இத்தாலி போலோக்னா நகரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலி தவிர, ஜேர்மனி மற்றும் பிரான்சிலிருந்த இலங்கையர்களும் இதில் இணைதிருந்தனர்.