முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி, அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ படையிர் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மேலும் குறித்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை, இராணுவம், இராணுவ வைத்தியர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.